விதை ?
- புத்தக வாசிப்பு மட்டுமே சுயமாக சிந்திக்கின்ற, முடிவெடுக்கின்ற ஒரு நல்ல தலைமுறையை உருவாக்கும். வாசிப்பு பழக்கம் இன்றைய தலைமுறைக்கும் எதிர்காலத் தலைமுறைக்கும் ஒரு பாலமாக இருந்து அறிவைக் கடத்துகின்ற செயலைச் செய்கின்றது. நம்முடைய வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் கண்டுபிடிப்புகள் போன்றவற்றை நாம் வாசிப்பின் மூலம் நாம் நம் முன்னோர்களிடமிருந்து பெற்றோம். நம்மிடமிருந்து எதிர்காலத் தலைமுறையினர் வாசிப்பின் மூலம் பெற, நாம் வாசிப்பை நேசிப்பதோடு நம் சந்ததிகளுக்கும் வாசிப்பை நேசிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தகங்கள் வாங்க செய்யும் செலவு, செலவு அல்ல அது எதிர்கால முதலீடே.
- வாசிப்பு பழக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு.
- இதற்கான விதையை பள்ளி பருவத்தில் விதைப்பதே இவ்வமைப்பின் நோக்கம்.
- இதற்காக நாங்கள் தமிழ் வழியில் பயிலும் பள்ளி மாணவச் செல்வங்களுக்கு வெவ்வேறு தலைப்புகளில் நூல்களை வழங்கி வருகிறோம்.
- ஒவ்வொரு வாரமும் மாணக்கர்கள் தங்களது நூல்களை சுழற்சி முறையில் பரிமாற்றம் செய்து கொண்டு வாசிக்கின்றனர்.
வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல துவக்கம் ...! வாழ்த்துக்கள்
ReplyDeleteWishes
ReplyDeletehttps://www.facebook.com/vithaitamilnadu
ReplyDelete