தாதம்பட்டி ,வேட்டாம்பாடி ஊராட்சி , நாமக்கல் மாவட்டம் 4 மற்றும் 5 ம் வகுப்புகள்
இன்று 15.12.2017 நாமக்கல் ஒன்றியம் வேட்டாம்பாடி ஊராட்சி தாதம்பட்டி கிராமத்தில் உள்ள தமிழக அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நூல்கள் வழங்கும் விழா விதை அமைப்பால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. அப்பள்ளியில் 4 மற்றும் 5 ம் வகுப்புகளில் பயிலும் 34 மாணவ மாணவிகளுக்கு அக்கிராமத்தை சார்ந்த கால்நடை மருத்துவர் மாதேஸ்வரி அவர்களால் புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இவர் இதற்கு முன் 07.8.2015 அன்று இப்பள்ளிக்கு நன்கொடையாக நூல்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கியிருக்கிறார்.
No comments:
Post a Comment